சேலம்: சேலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் நடராஜர் சிலை மீட்கப்பட்டது. மூன்றரை அடி உயரம், 230 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை கடந்த வியாழக்கிழமை திருடப்பட்டது. சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான நடராஜர் சிலையை, விற்பதற்கு முயற்சித்து வந்தார். இந்நிலையில் வியபாரிகள் போன்று நடித்து சிலையை மர்ம நபர்கள் திருடிச் சேன்றனர். செல்வக்குமாரின் புகாரின் பேரில் சேலம் போலீசார் திருடர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீஸ் தேடுதல் வேட்டையின் போது சேலம் பொன்னாம்மாள் பேட்டையில் சிலை சிக்கியது. சிலை திருட்டு தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.