பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
மூணாறு: மூணாறில் தோட்டத் தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, கோயில்களில் திருவிழாக்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். மூணாறு தேயிலைத் தோட்டங்களில், தொழிலாளர்களாக தமிழர்கள் பல தலைமுறைகளாக வேலை செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக, தொழிலாளர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தனர்.அப்போது தொழிலாளர்கள், அந்தந்த பகுதிகளில் கோயில்களை அமைத்து வழிபட தொடங்கினர்.இந்த வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து கரகாட்டத்துடன், மேள, தாளங்கள் வரவழைக்கப்பட்டு, வெகு சிறப்பாக திருவிழாக்களை நடத்துவது வழக்கம். தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால்,தொழிலாளர்கள் வீடுகளுக்கு வெள்ளை அடித்து, சுத்தம் செய்து, அந்தந்தப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு விரதம் இருந்து வருவதுடன், திருவிழாக்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.