ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், இன்று(டிச. 25) அஷ்டமி பூப்பிரதஷணத்தை யொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை பூஜைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி நகர்வலம் வந்து, சுவாமி படியளித்தல் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியவுடன், நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.