பதிவு செய்த நாள்
25
டிச
2013
10:12
திருப்பதி: திருமலையில், மீண்டும் லட்டு டிக்கெட் முறைகேடு நடந்துள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும், தர்ம தரிசன மற்றும் பாத யாத்திரை பக்தர்களுக்கு, வைகுண்டம், 1ம் காத்திருப்பு அறையில், 10 ரூபாய் விலையில், இரண்டு டோக்கன்களுக்கு, தேவஸ்தானம், தலா, இரண்டு லட்டுக்களை அளித்து வருகிறது. இந்த லட்டு டோக்கன்களை, கலர் நகல் எடுத்து, திருட்டுத்தனமாக பக்தர்களுக்கு அளித்து, ஊழியர்கள் முறைகேடில் ஈடுபட்டது, தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யார் என கண்டறிய, அதிகாரிகள், விசாரணையை முழு அளவில் செய்து வருகின்றனர்.