கோவில் கருவறையில் லிங்க வடிவ பட்டாம் பூச்சி: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2013 10:12
திருவெண்ணெய்நல்லூர்: கும்பாபிஷேகம் நடந்த கோவிலின் கருவறையில், லிங்கம் வடிவில் பட்டாம் பூச்சி அமர்ந்ததால், பக்தர்கள் பரவசமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மல்லிகாபுரம் தீபேஸ்வரன் கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, கருவறையில் சிறிய பட்டாம் பூச்சி வந்து அமர்ந்தது. இதைக் கண்ட பக்தர்கள் சிலர், அது லிங்கம் போன்று இருப்பதையறிந்து வியப்படைந்தனர். பிற்பகல், 3:00 மணி வரை கருவறையை விட்டு பட்டாம்பூச்சி நகரவில்லை. கிராமவாசிகள், இதை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். கோவில் கோபுர சுற்றுப் பிரகாரத்தில், கிருஷ்ணர், இயேசுவுடன் கை கோர்த்து நடப்பது போலவும், ஒரு புறத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது போலவும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.