பெ.நா.பாளையம்: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் அன்னை சாரதாதேவி 161வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வித்யாலய வளாகத்தில் உள்ள கோவிலில் காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தி, பக்திபாடல்களுடன் விழா துவங்கியது. காலை 6.35 மணிக்கு வேத பாராயணம், 7.15 மணிக்கு பஜனை, விசேஷ பூஜை நடந்தன. தொடர்ந்து 10.15 மணிக்கு ஹோமம், 11.15 மணிக்கு சாரதாதேவியின் அன்பு மொழிகள் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆரத்தியும் நடந்தது. மதியம் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலாளர் சுவாமி அபிராமானந்தர் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.