மணக்காலில் புதை பொருளாக இருந்த சிவன் கோவில் கட்டும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2013 05:12
திருவாரூர்: திருவாரூர் அருகே சோழர்காலத்து சிவன் கோவில் பூமியில் புதை பொரு ளாக இருந்ததை அப்பகுதியினர் மீட்டு புதிதாக கோவில் கட்டி வருகின்றனர். தற்போதைய தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள் முற்காலத்தில் சோழ மண்டலமாக விளங்கியது. அப்போது சோழர் வம்சத்தினர்கள் 108 சிவத்தலங்கள் கட்டினர். அக்கோவில்கள் மாலிக்காபூர் படையெடுப்பில் சிதைந்துள்ளது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கோவில் இருந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டு புதுபிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர்-கும்பகோணம் சாலையில் மணக்கால் என்ற கிராமம் 18 கோவில்கள், 18 குளங்கள் மற்றும் 18 தெருக்கள் அடக்கிய பெருமைக்குரிய பகுதியாகும். இந்த பகுதியில் பாடல் பெற்ற சிவன்கோவில் மற்றும் வைப்பு தலமாக அப்பர் பெருமான் பாடிய சிவத்தலங்கள் உள்ளது. மேலும் பெருமைக்குரிய பெருமாள் தலமும் <உள்ளன. அதேப்பகுதியில் முட்புதற்கள் மண்டி கிடந்த பகுதியில் தோண்டிய போது சோழர்காலத்து விக்ரஹங்கள் மற்றும் பழமையான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இதில் பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட கருங்கள் விக்கஹங்களை கொண்டு புதியகோவில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு சிவன் சுயம்பாக காட்சித்தருகிறார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது குறிப்பிடதக்கது.