பதிவு செய்த நாள்
27
டிச
2013
12:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் புனித தீர்த்தங்களில், தண்ணீர் ஊறறு அளவு கணக்கிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி, தீர்த்தங்களை தொட்டியில் சேகரித்து, சென்சார் கருவி மூலம், "ஷவர் போல பக்தர்கள் மீது, ஊற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தீர்த்தக் கிணறுகளில் உள்ள நீர் கணக்கப்பட்டது. மதுரை பொதுப்பணி நீரியியல் துறை முன்னாள் துணை இயக்குநர் வள்ளியப்பன், முன்னாள் உதவி இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோர், கோயில் தீர்த்த கிணறுகளில், நீர் மட்டத்தை அளவிட்டு, மின் மோட்டார் உதவியுடன், ஒரு மணி நேரம், தண்ணீரை தொட்டியில் சேகரித்தனர்; அரை மணி நேரத்திற்கு பின், மீண்டும் தீர்த்தக்கிணற்றில், நீர் ஊறும் அளவை கணக்கிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை, மதுரை ஐகோர்ட் கிளையில், விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று, தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறினர்.