பதிவு செய்த நாள்
27
டிச
2013
12:12
கரூர்: பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 27ம் ஆண்டு விழா நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த, 24ம் தேதி ஐய்யபன் கோவில் அருகில் கொடியேற்றத்துடன் விழா துவக்கியது. பின் கனகதாரா மகாலட்சுமி ஹோம, மாலை 6 மணிக்கு, குத்துவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம், காலை விக்னேஷ்வர பூஜையுடன் மகாமேரு பிரஸ்த அதர்வசீர்ஷ சகஸ்ர கணபதி ஹோமம் நடந்தது. இதில், நாடு செழிக்கவும், மழைவேண்டி கூட்டு வழிபாடு செய்யப்பட்டது. நேற்று காலை, 7 மணிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் யானை மீது கொண்டுவரப்பட்டது. பின், 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து காலை, 9 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, நெய், தேன், பஞ்சாயமிர்தம், பழம், பால், திரவியம், சந்தனம், விபூதி, திரவியம், இளநீர், பால் ஆகியவற்றில் மஹா அபிஷேகம் நடந்தது. காலை, 10 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. பின், பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இன்று, 28ம்தேதி சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. ஜனவரி, 1ம்தேதி ஹனுமந்த ஜெயந்தி உற்சவம் நடத்தப்பட இருக்கிறது.