ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அய்யப்ப பக்தர்கள் வந்தனர்.அக்னி தீர்த்த கடல், கோயில் தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோயில் சன்னதி தெரு, நான்கு ரதவீதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. போதிய சுகாதார வளாகம், குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் ஸ்டாண்ட் அருகே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியதால், துர்நாற்றம் வீசுகிறது.