சில பக்தர்கள், தலைமேல் கைகளை உயர்த்தி வைத்து கூப்பியபடி, சுவாமி சந்நிதியை நோக்கி, தங்களைத் தாங்களே சுற்றியபடி சுவாமியைவணங்குவார்கள். இதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். இவ்வாறு கோயிலுக்குள் செய்ய அனுமதியில்லை. சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் தான், தன்னைத் தானே இரண்டு முறை சுற்றிக் கொண்டு வணங்கலாம்.