சந்திரன் பதினைந்து நாட்கள் வளரவும், பதினைந்து நாட்கள் தேயவும் செய்கிறது. இதன் தன்மையைப் பொறுத்தே, வளர்பிறை நாட்களில் மனத் தெளிவும், தேய்பிறையில் மனதில் சலனமும் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது. அதனால்தான், ஆயிரம் காலத்துப் பயிரான திருமண வைபவத்தை வளர்பிறை முகூர்த்தத்தில் நடத்த விரும்புகின்றனர்.