கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷம் நடந்தது. அதையொட்டி மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பிரதோஷ மூர்த்தி, கோவிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உபயதாரர் ஆறுமுகம், தர்மகர்த்தா ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.