பதிவு செய்த நாள்
01
ஜன
2014
12:01
மூணாறு: மூணாறில் இருந்த வழி பிள்ளையார் கோயில் இடிக்கப்பட்டு தரை மட்டமாக கிடந்ததால் பதட்டம் ஏற்பட்டது. மூணாறு நியூ காலனி செல்லும் ரோட்டில்,மகாத்மாகாந்தி காலனி அருகே வழி பிள்ளையார் கோயில் இருந்தது.நேற்று முன் தினம் இரவு வரை நல்ல நிலையில் இருந்த கோயில்,நேற்று காலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. மூணாறு அருகே பெரியவாரை லோயர் டிவிஷனில் இருந்த முனியாண்டி கோயிலை கடந்த 26ல், சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். இதே போல் வழிப் பிள்ளையார் கோயிலையும் சமூக விரோதிகள் இடித்து இருக்கலாம், எனக் கருதி,அப்பகு மக்கள் திரண்டு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.இதனால் மூணாறு-காலனி ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பதட்டம் நிலவியது. மூணாறு இன்ஸ்பெக்டர் ஷானிஹான் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீரமைத்தார். இதையடுத்து பொது மக்கள்,நகரை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தினர்.மூணாறு பகுதி பா.ஜ., தலைவர் மதியழகன், மூணாறு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். இடிக்கப்பட்ட கோயிலை டி.எஸ்.பி., சஜி,தேவிகுளம் ஆர்.டி.ஓ.,மதுகங்காதரர் நேரில் பார்வையிட்டனர். இடிந்த கோயிலை தடயவியல் நிபுணர்கள் இன்று (ஜன 1ம் தேதி) ஆய்வு செய்கின்றனர்.