பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் நேற்று சர்ச்சுகள், கோவில்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சாந்தோம் மற்றும் பரங்கி மலை புனித தோமையர் தேவாலயம், பாலவாக்கம் அந்தோணியார் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி உள்ளிட்ட தேவாலயங்களில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணி முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில், தங்க கவச அலங்காரத்துடன் சுவாமிக்கு வழிபாடு நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள்கோயிலில் ரங்கநாத பெருமாள் மற்றும் சீதேவி,பூதேவியுடன் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர், மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீசுவரர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடந்தது.