அமாவாசை: ராமேசுவரம் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2014 02:01
ராமேஸ்வரத்தில் அமாவாசை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு நாளான புதன்கிழமை அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டும் அமாவாசையும் புதன்கிழமை ஒரே நாளில் வந்ததால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலிலும் மற்றும் கோயிலின் 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர்.