பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும் 11ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காரிமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. பக்தர்களுக்கு டாக்டர் பன்னகசைனம் குடும்பத்தினர் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி கோட்டை பரவாசுதேவர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 3.30 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஸ்ரீ வாரி குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. * ஆட்டுகாரம்பட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ணா பிருந்தாவனத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்வாமிக்கு அதிகாலை, 3.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.