பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிவன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி -சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சாமியார் மடத்தில் செம்பொற்ஜோதிநாதர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2002, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்தது. தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் சிவன்கோவில் திருப்பணி நடந்துள்ளது. அதனையொட்டி சைவ சித்தாந்த முறைப்படி கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர், பிள்ளையார், அனுமதி பெறுதல், திருமகள், நிலத்தேவர், மண் எடுத்தல், முளை இடுதல், காப்பு அணிதல் வழிபாடுகளுடன் முதற்கால பூஜைகள் துவங்குகிறது. நாளை (11ம் தேதி) காலை, மாலை வழிபாடுகள் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி காலை 8:00 மணி முதல் 8:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.