பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
நகரி: திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில், நாளை, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சித்துார் மாவட்டம், நகரி கரியமாணிக்க பெருமாள் கோவில், நாராயணவனம் கல்யாணவெங்கடேச பெருமாள் ஆகிய இரண்டு கோவில்கள் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், நாளை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு தரிசனம் மற்றும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை, 3:00 மணிக்கு திருப்பாவை சேவை தொடர்ந்து, அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அப்போது, பக்தர்கள் சொர்க்க வாசலில் சென்று தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.