தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2014 10:01
தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராய் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் பிரகாரத்தில் வலம் வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.