திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆர்.சி., கத்தோலிக்க நல்லாயன் தேவாலயத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.சி., கத்தோலிக்க நல்லாயன் தேவாலயத்தில் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. கிரிஸ்டோபர் வரவேற்றார். அருட்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்கி, சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்துவர்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். அருட்தந்தைக்கு முக்கியஸ்தர்கள் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்தனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், கும்மி, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அருட்தந்தை ஆன்ரூஸ், சகாயராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியர் பால்ஆரோக்கியராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் லாரன்ஸ் நன்றி கூறினார்.