பதிவு செய்த நாள்
17
ஜன
2014
10:01
ராமேஸ்வரம்: காணும் பொங்கலை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள், ஜன.,14ம் தேதி மகர ஜோதி தரிசனம் செய்த பின்னர், நேற்று காணும் பொங்கல் யொட்டி ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மனை, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், நான்கு ரதவீதிகள், சன்னதி தெருவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால், நேற்று ஓட்டல், டீக்கடைகள் "ஹவுஸ் புல் லாக இருந்தது. போதிய கழிப்பிட வசதி இல்லாததால், அக்னி தீர்த்த கரை, பஸ் ஸ்டாண்ட் அருகே திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியதால், அப்பகுதிகள் துர்நாற்றம் வீசியது. போதிய கழிப்பிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.