பதிவு செய்த நாள்
20
ஜன
2014
11:01
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கத்தில் தைப்பூச விழா நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. இதில், ஜீவானந்தம், அசோக் நகர், குறிஞ்சி நகர் பொது மக்கள் கலந்து கொண்டு வள்ளலாரின் அருளாசியை பெற்றனர். மதியம் 12.00 மணிக்கு சங்கத் தலைவர் ஏழுமலை தலைமையில், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.விழாவில் பிரபு, கிருஷ்ணன், தயாளன், சுப்பரமணி, குறிஞ்சி நகர் சாமிநாதன், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.