ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பின் நடை சாத்தல் சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஆயிர வைசிய மகாஜன சபை சார்பில் மகா அபிஷேகம் நடந்தது. மாகேஸ்வர பூஜைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகா அபிஷேகம் செய்யப்பட்டு, நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.