பதிவு செய்த நாள்
21
ஜன
2014
11:01
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. ஸ்ரீபெரும்புதுார், வடபுஷ்கரணி தெருவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் வேதாந்த தேசிகன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம், கல்யாண உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு, நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி உடன் திருமணம் நடக்கும் நிகழ்ச்சி, மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை நடந்தது. திருக்கல்யாண கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடன் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.