பதிவு செய்த நாள்
22
ஜன
2014
10:01
பழநி: தைப்பூச விழாவை தொடர்ந்து, பழநி மலைக்கோயிலில், 50 ஆயிரம் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம் வழங்க, 10 ஆயிரம் கிலோ, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடக்கிறது. எடப்பாடியைச் சேர்ந்த மக்கள், பழநி மலைக்கோயிலில், பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக, காவடிகள் எடுத்து, பாதயாத்திரையாக, பழநி வருவர். இந்த ஆண்டு வழிபாட்டிற்காக, ஜனவரி, 14 ல், காவடிகளுடன், புறப்பட்டு, இன்று காலை, மானூர் ஆற்றுபாலத்தில், காவடி பூஜை செய்கின்றனர். இவர்களுக்கு, பிரசாதம் வழங்குவதற்காக, வழிபாட்டுக் குழுவினர் மூலம், மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், 10 ஆயிரம் கிலோ, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து, எடப்பாடியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், ""இது, 355 வது ஆண்டு வழிபாடு. 10 டன் மலை வாழைப்பழம், 3 டன், பேரீச்சை, 750 கிலோ, கற்கண்டு, ஆறு டன், சர்க்கரை மூடைகள், 12 டின் தேன், நெய், மற்றும் ஏழு கிலோ ஏலக்காயை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கிறோம். இன்று இரவு, 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், மலைக்கோயிலில் தங்குவர். அதிகாலை வழிபாட்டிற்குப் பின், அனைவருக்கும், பஞ்சாமிர்தம் வழங்கப்படும், என்றார்.