திருவள்ளூர்: வீரராகவர் கோயிலில் தை மாத பிரம்மோற்சவ விழா நாளை (ஜன.25) தொடங்குகிறது. இதையொட்டி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மேலும் உற்சவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, ஹனுமந்த வாகனம், யாளி வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலிக்கிறார்.