நெய்வேலி: நெய்வேலியில் சத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நெய்வேலி வட்டம் 2ல் உள்ள ஸ்ரீசங்கரா ஹாலில் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் 8வது ஆண்டு ஜெயந்தி விழா நெய்வேலி சேஷார்ப்பணம் அமைப்பு சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை குருஜி ரமேஷ் தலைமையில் சத்குருவின் த்ரிசதி நாமார்ச்சன ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து "டிவி புகழ் பரசுராமன் சத்குரு திருவடிகள் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நெய்வேலி கிளைத் தலைவர் சுப்ரமணிய அய்யர், நெய்வேலி சேஷார்ப்பணம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியநாதன் மற்றும் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.