இறைவனே இசை வடிவமாக உள்ளார். இசையால் வசமாகா இதயம் எது? என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். சிவன் ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பதாக சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர், கொட்டு ஆட்டு பாட்டாகி நின்றாய் போற்றி என்று பாடுகிறார். நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் அத்தனையும் இசைப்பூக்களே. அப்பூக்களால் பூஜித்தால் இறையருள் பெற்று மகிழலாம்.