சிவகங்கை: மானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் தை மாத திருவோணத்தை முன்னிட்டு திருவிளக்குப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவர் பூமி நீலாதேவி சமேத தியாக விநோதப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி தங்கக்கவசம் அணிந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.