கூடலூர்: சளிவயல் சக்தி முனீசுவரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 31ம்தேதி கொடி ஏற்றுதலுடன் தொடங்கியது. நேற்று காலை மகா கணபதி ஹோமமும், நாடி தைல அபிஷேகமும், சந்தான பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து சென்று மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.