நாகப்பட்டினம்: நாகையில் மிக பழமையான சௌந்திரராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருமால் என்ற பெயர் பூண்டு பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணு தமது பக்தர்களுக்கு பெருங்கருணை திறத்தை அளிப்பதற்காக 108 வைணவ திவ்யதேசங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.இதில் 18 வது திவ்யதேசமாக விளங்கும் நாகை சவுந்திர ராஜபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 30 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தன. காலை 5.30 மணிக்கு யாகசாலை 5 ம் கால பூஜை,காலை 8 மணிக்கு யாத்ராதானதிகள் கும்ப,பிம்ப உத்தானம்,மஹா ஸம்ப்ரோஷனத்திற்கு கடம் புறப்பாடு மற்றும் காலை 10.30 மணிக்கு விமானங்கள்,மூலவர் பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் முனுசாமி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.