சேத்துப்பட்டு கருணாம்பாடியில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
சேத்துப்பட்டு ஒன்றியம், செய் யனந்தல் அடுத்த கருணாம் பாடியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. முன்னதாக 108 கல சங்களில் புனிதநீர் நிரப்பி 3 கால யாகஹோம பூஜைகளை வேதமந்திரங்கள் முழுங்க சிவாச்சாரியார்கள் பூஜித்த னர். பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர் பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீரினை கோவில் வலம் வந்து கருவறை கோபுரம், வர சித்தி விநாயகர் மற்றும் பரி வார சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவில் உற்சவர் விநாயகரை மலர் களால் அலங்கரித்து திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதிசின்னக் குழந்தை, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், செய்யனந்தல் ஊராட்சிமன்ற தலைவர் பாஸ்கர் உள்பட திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.