கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் மாசிமக வபிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. அதேபோல ராஜகோபாலசுவாமி கோவில், ஆதி வராக பெருமாள் கோவில்களிலும் மாசிமக விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத்திருவிழாஇதேபோல பூலோக வைகுண்டம் எனப்படும் சாரங்கபாணி கோவிலில் மாசிமக விழா வருகிற 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விழா நடக்கிறது. 15-ந் தேதி(சனிக்கிழமை) பொற்றாமரைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்காக 600 டின்கள் திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு 34 அடி நீளமும், 34 அடி அகலமும் கொண்ட தெப்பம் கட்டும் பணியும், கோவிலை சுற்றி வர்ணம் பூசும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.