ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர்த் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை 6 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி உள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு 8 மணிக்கு நம்பெருமாள் வாகன மண்டபத்திற்கு வந்தார். அதன்பின் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மீண்டும் புறப்பாடாகி 9-30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12 ந் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையாளர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி கல்யாணி அறங்காவலர்கள் ரெங்காச்சாரி, சீனிவாசன், கஸ்தூரி ஆகியோர் செய்துள்ளனர்.