சங்ககிரி அருகேயுள்ளகஸ்தூரிபட்டி பெரிய மாரியம்மன் கோயில்கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ விநாயகர், பெரிய மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கஸ்தூரிப்பட்டி ஸ்ரீ விநாயகர், பெரிய மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெற உள்ளது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் கோயில் வளாகத்தில் பூஜைகள் தொடங்கியது. பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர், முதல்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை 2 ஆம் கால யாகசாலை பூஜையும், கோபுரக்கலசம் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.