இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 12:02
இருக்கன்குடி மாரியம் மன் கோவில் தை கடைசி வெள்ளி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்ம னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.மாரியம்மன் கோவில் சாத்தூர் அருகே இருக்கன் குடியில் உள்ள மாரியம்மன் கோவில் தென் மாவட்டங் களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வழக்கமாகவே செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திர ளான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசிப்பார்கள். குறிப்பாகதை மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை களில் திரு விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி தை கடைசி வெள்ளி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்ம னுக்கு சிறப்பு பூஜை, தீபாராத னைகள் நடைபெற்றன.விழாவில் தென் மாவட் டங்களில் இருந்து பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து மாவிளக்கு, அக்னிச் சட்டி மற்றும் ஆயிரங்கன் பானை எடுத்தும், அங்கப்பிர தட்சணம் செய்தும் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.சிறப்பு பஸ்கள்தென் மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட் டன. கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, சுகாதார வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சாத் தூர் போலீஸ் துணை சூப் பிரண்டு அறிவானந்தம் தலை மையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர்.கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, செயல் அலுவலர் தனபாலன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் திருவிழாவுக்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.