மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பொருள் சேரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
குழந்தைகள் மீது பாசம் கொண்ட மகர ராசி அன்பர்களே!
சுக்கிரன் பிப்ரவரி 25ல் உங்கள் ராசிக்கு இடம் மாறி நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த ஒரு செயல்பாட்டையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால், குருவின் 9-ம் இடத்து பார்வை கும்பத்தில், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் விழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீட்டினுள்ளும், உறவினர் வகையிலும் பிரச்னை வரலாம். மார்ச் 9க்கு பிறகு, அவப்பெயரை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். குடும்பத்தில், தீவிர முயற்சியின் பேரில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாய் காணும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள். போட்டியாளர்களின் தொல்லைகள் அவ்வப்போது தலை தூக்கும். மார்ச் 9,10,11ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறை காட்டவும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். சலுகைகளை அதிக சிரத்தை எடுத்தே பெற வேண்டியிருக்கும். இடமாற்ற பீதி மார்ச் 9க்கு பிறகு பிறகு மறையும். எனினும், பணியில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்களுக்கு போதிய வருமானம், எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு சுமாரான நிலைதான் நிலவுகிறது. எனினும், குருவின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருப்பதால், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆபரணங்கள் வாங்க யோகம் கூடி வரும்.
நல்ல நாள்: பிப்., 13,14,20,21,22,23,26,27 மார்ச் 3,4,9,10, 11,12,13 கவன நாள்: பிப்ரவரி15,16,17, மார்ச் 14 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை. எண்: 7. வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கும் வியாழக்கிழமை குருவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டால், தடை அகன்று நன்மை கிடைக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »