கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வாழ்வில் வளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
குடும்ப ஒற்றுமையை விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!
குரு, கேது தொடர்ந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். சுக்கிரன் பிப்., 24 வரை பண வரவு தருவார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும், பொருளாதார வளமும் காணலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். பகைவர்களின் தொல்லை மார்ச் 9க்கு பிறகு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்ரவரி13,14 மார்ச் 12,13-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். இடமாற்றம் காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது கிடைக்க தாமதமாகும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். மாணவர்கள் வளர்ச்சி காணலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப் படுவர். ஆபரணங்கள் வாங்க யோகம் கூடிவரும். குடும்பத்தோடு கோவில்குளம் என சென்று வருவீர்கள். 9-ந் தேதிகளில் சந்திராஷ்டமம். அப்போது அனாவசியமாக எதிலும்பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
நல்ல நாள்: பிப்.,13,14,15,22,23,24,25,28, மார்ச்1,2,5,6,12, 13,14. கவன நாள்: பிப்.17,18 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு எண்: 2,6. வழிபாடு: சூரியன் வழிபாடு நன்மை தரும். துர்க்கை வழிபாடும் நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »