விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் நடந்தது. அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் 30வது ஆண்டு திருநட்சத்திர உற்சவம் நடந்தது. அதிகாலை சுப்ரபாத இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் வீதியுலாவும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.காலை 10 மணிக்கு உலக நன்மை வேண்டி லஷ்மி மகா சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி திருவாராதனம், சாற்றுமறை, ஆரத்தி நடக்கிறது. மாலை பக்தி சொற்பொழிவு, நாதஸ்வர இன்னிசை, சகர்ச நாம அர்ச்சனை, மணிக்கு பரத நாட்டியம் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தன.விழா ஏற்பாடுகளை வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.