பதிவு செய்த நாள்
18
பிப்
2014
10:02
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலய வளாகத்தில், 2012 செப்.,8ல், தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு, 7 அடி உயர அன்னையின் திரு உருவம் நிறுவப்பட்டது. சனிக்கிழமைதோறும் மாலை, சிறப்பு திருப்பலி நடக்கிறது. இங்கு, தூய லூர்து அன்னையின் திருவிழாவை, பிப்.,14ல், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி பொருளாளர் வின்சென்ட் சகாயராஜ் அடிகளார், ஆலய பங்குகுரு ஜோசப் ராஜசேகர் அடிகளார் துவங்கி வைத்தனர். திருப்பலி, மறையுரை நடந்தது. 3ம் நாளான, பிப்.,16ல், லூர்து அன்னையின் திரு உருவத்திற்கு, ஐம்பொன்னால் ஆன கிரீடம் மகுடம் சூட்டும் விழா நடந்தது. விருதுநகர் மறைவட்ட அதிபரும், தூய இன்னாசியார் ஆலய பங்கு குருவுமான ஞானப்பிரகாசம் அடிகளார், தூய சவேரியார் ஆலய பங்கு குரு ஜோசப் ராஜசேகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. மகுடம் சூட்டப்பட்ட பின், லூர்து அன்னையின் தேர்பவனி, ஆலய வளாகத்தில் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தூய சவேரியார் ஆலய பங்கு குரு ஜோசப் ராஜசேகர் அடிகளார் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்தனர்.