பதிவு செய்த நாள்
20
பிப்
2014
11:02
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா, மார்ச் 15, 16ல் நடைபெறுகிறது. இதில், விசா இருந்தால் மட்டுமே, பத்திரிகையாளர்கள் பங்கேற்க முடியும் என, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் கூறியதாவது: மார்ச் 15ம் தேதி மாலை, கச்சத்தீவு அந்தோணியார் சர்ச்சில் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. மறுநாள் ( மார்ச் 16) காலை சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. பங்கேற்கும் பக்தர்கள் விருப்ப மனுவில் போட்டோ ஒட்டி, கூடுதலாக இரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, மற்றும் போட்டோவுடன் அரசு வழங்கிய அடையாள அட்டை நகல் இணைத்து கட்டணமாக ரூ.700ஐ, மார்ச் 5க்குள், படகு உரிமையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், உயர் அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று இணைக்க வேண்டும். மார்ச் 8 தேதி முதல், விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். நாட்டுப்படகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை. தேவையான உணவு, குடிநீர் எடுத்து வர வேண்டும். போதை வஸ்துகள், பாலிதீன் பைக்கு தடை உள்ளது. கூடுதல் தகவலுக்கு 99527 27919ல் தொடர்பு கொள்ளலாம், என்றார். இவ்விழாவில் பங்கேற்க இந்திய நிருபர்கள், போட்டோகிராபர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வெளியுறவு சட்டப்படி "விசா அனுமதி பெற்று பங்கேற்கலாம் என, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.