மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2014 11:02
மப்பேடு: மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில், ஆறாம் ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று கோலாகலமாக துவங்கியது. கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். இதேபோல், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கடந்த 13ம் தேதி பந்தகால் விழாவும், 21ம் தேதி கிராம தேவதைகளுக்கு அபிஷேகமும், நேற்று முன்தினம் விநாயகர் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
நாள் காலை மாலை 24.02.14 சந்திரசேகர் கேடய உற்சவம் பூத வாகனம் சோமாஸ்கந்தர் 25.02.14 சந்திரசேகர் கேடய உற்சவம் அதிகார நந்தி சோமாஸ்கந்தர் 26.02.14 சந்திரசேகர் கேடய உற்சவம் நாக வாகனம் சோமாஸ்கந்தர் 27.02.14 அதிகார நந்தி பஞ்சமூர்த்தி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி 28.02.14 சந்திரசேகர் கேடய உற்வசம் யானை வாகனம் 01.03.14 தேர் சோமாஸ்கந்தர் இராவண வாகனம் சோமாஸ்கந்தர் 02.03.14 சந்திரசேகர் கேடய உற்சவம் திருக்கல்யாணம் 03.03.14 சந்திரசேகர் கேடய உற்சவம் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடராஜர் அபிஷேகம் (இரவு 10:00 மணிக்கு மேல்) 04.03.14 வள்ளுவ தரிசனம் தீர்த்தவாரி நடராஜர் உற்வசம் ரிஷப வாகன உற்சவம் 05.03.14 - பந்தமாரி உற்சவம் 06.03.14 - சண்டிகேஸ்வரர் உற்சவம். பைரவர் விடையாற்றி - வடைமாலை.