கோவை: வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி விழா பூஜைகள் வரும் 27ம் தேதி நடக்கிறது. வரும் வியாழக்கிழமை மதியம் 12.00 மணிக்கு ஏழாவது மலையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு மலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆறாவது மலையிலுள்ள ஆண்டிச்சுனையில் பகல் 1.00 மணிக்கு மேல் அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் சிற்றுண்டிகளும், இரவு நேரத்தில் தொடர்ந்து சுக்குகாபியும், இஞ்சியும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சிறப்பு பணிகள் தொடர்ந்து 153 ஆண்டுகளாக ஆண்டிச்சுனை அன்னதான குழுவினரால் நடத்தப்படுகிறது.