தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மேற்கு பகுதியில் குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. நேற்று ஆலய திருவிழாவை முன்னிட்டு ரத வீதி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு சில சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் தாடிக்கொம்பு போலீசார் சமரச பேச்சு நடத்தினர். இதில் முடிவு ஏற்படவில்லை. இதனால், திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலசுப்பிரமணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சில நிபந்தனைகளுடன் ஊர்வலம் செல்ல தாசில்தார் அனுமதி வழங்கினார். இதற்கு உடன்படாத எதிர் தரப்பினர் வெளியேறினர்.