ராமநாதபுரம் : இளமனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன், அக்னி வீரபுத்திரர், ராக்காச்சி, கருப்பன், சோணையா சுவாமிகளுக்கு மாசி களரி திருவிழா நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கி, ஆடுகள் பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் பூஜாரிகள், விழாக்குழுவினர் செய்தனர்.