பதிவு செய்த நாள்
07
மார்
2014
11:03
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் மகோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, கடந்த 5ம் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சி, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் 12:30 மணிக்கு அம்மனை தேரில் வைத்து தேரோட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., குமரகுரு வடம் பிடித்து துவக்கி வைத்தார். இன்று (7ம் தேதி ) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மாநில சர்க்கரை இணைய தலைவர் ஞானமூர்த்தி, ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ஏகாம்பரம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமார், முன்னாள் செயலாளர் ஏகாம்பரம், ஊராட்சி தலைவர் சந்திராபாலு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணிராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தம்மாள் சக்ரவர்த்தி, துணைத் தலைவர் செல்வி முருகதாஸ், கூட்டுறவு வங்கி தலைவர் பாபு உட்பட பலர் கலந்த கொண்டனர்.