புதுச்சேரி : கதிர்வேல் சுவாமி கோவிலில் நேற்று இரவு நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கதிர்காமத்திலுள்ள கதிர்வேல் சுவாமி கோவிலில், சூரசம்ஹார உற்சவ விழா, கடந்த 1ம் தேதி, காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. மாலை 3.00 மணிக்கு சஷ்டி அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இரவு 10.30 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, சேர்மன் ஜெயபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, வெள்ளி மயில் வாகனத்தில் கதிர்வேல் சுவாமி வீதியுலா நடந்தது.