பரமத்திவேலூர்: நாமக்கல், பாகம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை, பொங்கல், மாவிளக்கு பூஜை, வாண வேடிக்கை ஆகியவை நடைபெற்றது. பின்னர் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.