Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உண்டியல் மண்டபம்! மடப்பள்ளியில் மகாலட்சுமி! மடப்பள்ளியில் மகாலட்சுமி!
முதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » தகவல்கள்
இத்தலத்தின் பிற சன்னதிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2014
05:03

வரதராஜ சுவாமி சன்னதி: திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

யோக நரசிம்மர் சன்னதி: முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந் துள்ளது. இவரை கிரிஜாநரசிம்ம சுவாமி என்று அழைப்பர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப் பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற் களாக இருக்கின்றன.

கருடாழ்வார் சன்னதி: வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்ஸவ கொடியேற்றும்போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்க  பட்டிருக்கும். இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத் தால் நோய், நொடி எதுவும் வராது என்பது நம்பிக்கை. வெங்கடாசல பதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்துசெல்வார்கள். அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார்.

ராமானுஜர் சன்னதி
: சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே, ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை, "பாஷ்யக்காரர் சன்னதி என அழைக் கிறார்கள். ராமானுஜர் திருமலைக்கு வந்தபோது, பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம்புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண் டில் இவரது சன்னதி அமைக்கப் பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சங்கீர்த்தன பண்டார அறை
: ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் "தலப்பாகமரா எனப்படும் "சங்கீர்த்தன பண்டார என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். "தலப்பாக கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக இதற்கு "சங்கீர்த்தன பாதுகாப்பு அறை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும், அவரது மகன், பெயரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். தென்னிந்திய இசைக் கலைக்கு இவர்களது பாடல்கள் மகுடம் சூட்டுவது போல் உள்ளன.

 
மேலும் திருப்பதி தரிசனம் தகவல்கள் »
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
பிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து ... மேலும்
 
temple news
கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி ... மேலும்
 
temple news

தல சிறப்பு! மார்ச் 12,2014

இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். ... மேலும்
 
temple news
பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar